இலங்கை
அதீத எரிபொருள் பயன்பாடு: அங்கஜன் மீதும் விசாரணை!
அதீத எரிபொருள் பயன்பாடு: அங்கஜன் மீதும் விசாரணை!
நாடாளுமன்றத்தில் வலியுறுத்து
தமது பதவிக்காலத்தில் அளவுக்கு அதிகமான எரிபொருளைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் முன்னாள் துணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் அளவுக்கு அதிகமான எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் அவைத்தலைவர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று மேலும் தெரிவித்ததாவது:
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் எரிபொருளுக்காக 33 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளார்.
துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச 2024ஆம் ஆண்டில் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். எரிபொருளுக்காக 13 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளார். நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் 2024ஆம் ஆண்டில் நான்கு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார். எரிபொருளுக்காக 7 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளார்.
இந்த நபர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குரிய சாத்தியங்களை ஆராயுமாறு கோருகின்றேன் – என்றார்.