இலங்கை
அநுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

அநுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் துஷ்பிரயோகம்; பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது!
அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் பொலிஸாரால் நேற்றிரவு புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய சந்தேக நபர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் மருத்துவரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 37 வயதுடைய பெண்ணொருவரும் 27 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பிரதான சந்தேக நபரை அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (13) முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது