இலங்கை
இலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு; அதிகாரி பலி

இலங்கையில் இன்றும் துப்பாக்கிச்சூடு; அதிகாரி பலி
காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சிறைச்சாலை அதிகாரி காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.