சினிமா
“உடையை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள்….!” – சிவாங்கியின் அதிரடிக் கருத்து!

“உடையை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள்….!” – சிவாங்கியின் அதிரடிக் கருத்து!
தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான குரல் , நடிப்பு மற்றும் நகைச்சுவைச் செறிந்த பேச்சு மூலம் அதிகளவான ரசிகர்களைக் கொண்டுள்ள சிவாங்கி, அண்மையில் தனது உடைத் தேர்வு குறித்து சில விமர்சனங்களைக் கூறியுள்ள தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அதில் சிவாங்கி தனது உடைத் தேர்வு மற்றும் பெண்களின் உடை மீதான விமர்சனங்கள் போன்றவற்றுக்கு மிக அழகான பதில் வழங்கியுள்ளார். சிவாங்கி அதில் கூறும்போது, “நான் டைட்டா ட்ரெஸ் பண்ண மாட்டேன் என்றார். ஏன்னா நான் அப்படி ட்ரெஸ் பண்ணா குண்டாத் தெரிவேன்” என்றார். இதன் மூலம் தனது உடை பற்றிய விமர்சனங்களை அவர் அதிகம் கவனிக்கின்றார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. சிவாங்கியின் இந்த பதில், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், சிலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கடுமையாக முயற்சி செய்து எனது உடம்பைக் குறைத்து விட்டுத் தான் டைட்டான ட்ரெஸ் போட ஆரம்பிச்சேன். அதுக்கு சிலர் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் ட்ரெஸ் போடுவீங்களா என்று என்னைப் பேசினார்கள் என்று வருத்தமாக கூறியுள்ளார்.