இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல் தபால் விண்ணப்பம் ஏற்புக்காலம் நீடிப்பு!

உள்ளூராட்சித் தேர்தல் தபால் விண்ணப்பம் ஏற்புக்காலம் நீடிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்களை ஏற்கும்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை விண்ணப்பகாலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.