சினிமா
“எம்.குமரன் S/O மகாலட்சுமி” பட இயக்குநர் விடுத்துள்ள வேண்டுகோள்..!

“எம்.குமரன் S/O மகாலட்சுமி” பட இயக்குநர் விடுத்துள்ள வேண்டுகோள்..!
மோ .ராஜா இயக்கத்தில் மோகன் தயாரிப்பில் முன்னணி நடிகர்களான ரவி மோகன், அசின், பிரகாஷ் ராஜ், நதியா, விவேக், ஜனகராஜ், லிவிங்ஸ்டன், சுப்பாராஜு ஆகியோர் நடித்துள்ளனர்.இப் படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் சாதனை படைத்தது. மேலும் இது தெலுங்கில் வெளியான “அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி” என்ற பெயரில் வந்த தெலுங்குப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.இப் படம் மார்ச் 14 ஆம் திகதி நாளை வெளியாகவுள்ளது. மேலும் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிப்பதற்காக இப் படத்தின் இயக்குநர் ஒரு வேண்டுகோளினை விடுத்துள்ளார். இதை ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.குறித்த பதிவில் அவர் “இளைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ரீ-ரிலீஸ் என்ற ட்ரெண்டையே நீங்கதான் உருவாக்குனீங்க; ஒரு சின்ன மாற்றத்துக்காக, எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் ரீ-ரிலீஸை உங்க அம்மாவோடும் குடும்பத்தோடும் பாருங்க..20 வருடங்களுக்கு முன் அவர்கள் கொண்டாடிய படத்தின் தியேட்டர் அனுபவத்தை அவர்களுக்கு கொடுங்க” என கூறியுள்ளார்.