இலங்கை
புஷ்பராஜாவின் சகோதரர் விமான நிலையத்தில் கைது

புஷ்பராஜாவின் சகோதரர் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டில் இந்தியாவிற்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய நபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பூகுடு கண்ணா’ என அழைக்கப்படும் புஷ்பராஜாவின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.