சினிமா
அஜித்தின் விடாமுயற்சியை வீழ்த்திய டிராகன்!

அஜித்தின் விடாமுயற்சியை வீழ்த்திய டிராகன்!
உலகளவில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் மொத்த வசூலைக் காட்டிலும் அதிக வசூலைப் பெற்று ‘டிராகன்’ திரைப்படம் சாதனை புரிந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் ‘விடாமுயற்சி’ காணப்பட்டது.
ஆனால், படத்திற்கான செலவை ஒப்பிடும் போது, எதிர்பார்த்த வசூல் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘டிராகன்’.
2025 ஆம் ஆண்டு தமிழ் திரைத்துறையில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை டிராகன் நிகழ்த்தியிருக்கிறது.