நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 14/03/2025 | Edited on 14/03/2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டது. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான் எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. 

Advertisement

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து டீசர் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஆதிக் ரவிச்சந்திரன், “அஜித் சாருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாட்களும் மறக்க முடியாதது. அது வாழ்நாள் முழுவதும் நினைவுகளாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட்டையும் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 18ஆம் தேதி ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) என்ற முதல் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


<!–
–>

Advertisement

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

–>