இந்தியா
சிறைபிடித்த இலங்கை கடற்படை: காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுதலை

சிறைபிடித்த இலங்கை கடற்படை: காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுதலை
கடந்த மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். விசைப்படகை பறிமுதல் செய்தனர்.இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி புதுவை அரசு மத்திய மீன்வளத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியது. இதன்காரணமாக கடந்த 10-ம் தேதி இலங்கை மல்லாகம் நீதிமன்றம் 13 மீனவர்களையும் விடுதலை செய்தது. மேலும், யாழ்ப்பானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தமிழன் மற்றும் 12 மீனவர்களும் நேற்று யாழ்ப்பானத்திலிருந்து புறப்பட்டு இன்று நள்ளிரவு கொழும்பிற்கு வந்த சேர உள்ளனர். இவர்கள் அனைவரையும் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய துாதரம் செய்து வருகிறது