நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 14/03/2025 | Edited on 14/03/2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலியில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், அமீர் கானுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமீர் கானும் இன்றுதான் பிறந்தநாள் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ்வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமீர்கான் சார். நமக்குள் நடந்த இந்த அழகான உரையாடல்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் நுண்ணறிவுகளும் கதை சொல்லும் ஆர்வமும் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்திருக்கிறது.

Advertisement

இனிவரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்கை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு. இந்த சிறப்பான நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார். கூலி படத்தில் அமிர்கான் நடித்து வருவதாக ஒரு தகவல் இருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் கூலி அல்லாது அமீர் கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளதாகவும் ஒரு தகவல் இருப்பது நினைவுகூரத்தக்கது. 


<!–
–>

Advertisement

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement

–>