இலங்கை
வீதி புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்விற்கு வந்த அமைச்சர் சந்திரசேகரருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!

வீதி புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்விற்கு வந்த அமைச்சர் சந்திரசேகரருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்!
பருத்தித்துறை- பொன்னாலை வீதியில், தொண்டைமானாறு அரசடி முதல் பருதித்தித்துறை துறைமுகம் வரையிலான வீதியின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வல்வெட்டித்துறை சந்தியில் நேற்றையதினம்(13) இடம்பெற்றது.
இந்த நிலையில் நிகழ்வின் இறுதியில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் வெளியேறிச் செல்லும் போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அமைச்சருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.
குறித்த வீதி கடந்த ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட நிதி, நாடு வங்குறோத்து காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது நீங்கள் உங்கள் கட்சிக்காறர்களை கூட்டி வைத்து புதிதாக போடுவது போல காண்பிக்கிறீர்கள்.
வீதி பணி ஆரம்பிப்பு என்று வந்து ஏதும் சகய்யாமல் உங்கள் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துவிட்டுச் செல்கிறீர்கள் என தற்கத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை