Connect with us

இலங்கை

கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது!..

Published

on

Loading

கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது!..

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றையதினம் நிறைவுபெற்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று பிற்பகல் ஆரம்பமானது.

Advertisement

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர்  தலைமையில் இன்று காலை எழு மணிக்கு திருவிழா  சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வருகைதந்திருந்த மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனைத்  தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை கடற்படை தளபதி காஞ்சன பானகொட, யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், அரச உயர் அதிகாரிகள், நீதிபதிகள், கடற்படை அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

Advertisement

இறுதியில் கச்சதீவு பெருவிழாவின் நினைவாக ஆலய சூழலில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது. (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன