Connect with us

இலங்கை

கூகிளை விட மில்லியன் மடங்கு வேகம் ; உலகின் அதிவேக விரைவுக் கணினி அறிமுகம்!

Published

on

Loading

கூகிளை விட மில்லியன் மடங்கு வேகம் ; உலகின் அதிவேக விரைவுக் கணினி அறிமுகம்!

கூகுள் நிறுவனத்தின் கணினியை விட ஒரு மில்லியன் மடங்கு வேகத்தில் செயல்படும் கணினியைச் சீனா உருவாக்கியுள்ளது.

உலகின் சிறந்த குவாண்டம் கணினியை உருவாக்குவதில் அமெரிக்காவும், சீனாவும் போட்டியிட்டு வருகின்றது.

Advertisement

கூகிள் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு 53 க்யூபிட் சைகாமோர் ப்ராஸசரை பயன்படுத்தி குவாண்டம் கணினி ஒன்றை உருவாக்கியது.

10,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை, வெறும் 200 வினாடிகளில் செய்து, அந்த காலகட்டத்தில் உலகில் அதிவேகமாக இயங்கிய கணினியாக உருவெடுத்தது.

இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டு, சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (USTC ) ஆராய்ச்சிக் குழுவினர், 1,400 ஏ100 ஜிபியூ ப்ராஸசரை பயன்படுத்தி உருவாக்கிய கணினி, கூகுளின் கணினி 200 வினாடிகளில் செய்த பணிகளை வெறும் 14 வினாடிகளில் செய்து முடித்தது.

Advertisement

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை உருவாக்கியது.

தற்போது USTC குழுவினர், ‘ஜூச்சோங்ஷி – 3’ என்ற உலகின் அதிவேக கணினியை உருவாக்கியுள்ளனர்.

இந்த கணினியானது, கூகுள் நிறுவனம் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 1 மில்லியன் மடங்கு வேகமாக இயங்குகின்றது.

Advertisement

குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வாசிப்பு துல்லியம் மற்றும் கட்டுப்பாட்டுத் துல்லியத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் புதிய உயரங்களை எட்டியுள்ளதாக USTC குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன