Connect with us

பொழுதுபோக்கு

என்ன ஆச்சு வரலட்சுமிக்கு? – கையில் கட்டுடன் வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!

Published

on

injures

Loading

என்ன ஆச்சு வரலட்சுமிக்கு? – கையில் கட்டுடன் வீடியோ – ரசிகர்கள் அதிர்ச்சி!

விக்னேஷ் சிவனின் ”போடா போடி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து பாலாவின் ‘தாரை தப்பட்டை’, விஜய்சேதுபதியின் ‘விக்ரம் வேதா’, விஷாலின் ‘சண்டக்கோழி-2’, விஜய்யின் ‘சர்க்கார்’, தனுஷின்’மாரி-2′, உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இவருக்கு கடந்த ஆண்டு நிகோலய் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில், இவர் நடிப்பில் பல வருட காத்திருப்புக்கு பின் வெளியான மதகஜராஜா படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கையில் கட்டுடன் வரலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.அந்த வீடியோவில் அவர் , ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது சின்ன சண்டை காட்சியில் தனது கையின் கட்டை விரலில் காயம் அடைந்திருக்கிறது எனவும் காயம் குணமடைந்தவுடன் விரைவில் படப்பிடிப்பில் இணைந்துகொள்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன