சினிமா
“குட் பேட் அக்லி ” இறுதி நாள் சூட்டிங்கிற்கு போகாத அஜித்…! நடந்தது என்ன..?

“குட் பேட் அக்லி ” இறுதி நாள் சூட்டிங்கிற்கு போகாத அஜித்…! நடந்தது என்ன..?
அஜித் நடிப்பில் ஆதிக் ரவி இயக்கத்தில் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகின்றார்.இப் படத்தில் அஜித்துடன் இணைந்து ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். சமீபத்தில் இதன் teaser வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பினையும் அதிகரித்துள்ளது.இதை விட படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரபு ,பிரசன்னா ,ஜோகிபாபு ,பிரியா பிரகாஷ் வாரியார் ஆகியோர் நடித்துள்ளனர். அஜித் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் அவரது மனைவி ஷாலினி படத்தில் ஒரு ஹெமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது படத்திற்கான patch வேலைகளை ஒரு நாளில் இயக்குநர் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. மற்றும் இறுதி நாள் சூட்டிங்கில் அஜித் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இல்லாமல் படக்குழு படத்தினை எடுத்து முடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.