Connect with us

சினிமா

கையில் கட்டுடன் நடிகை வரலட்சுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

Published

on

Loading

கையில் கட்டுடன் நடிகை வரலட்சுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.கடைசியாக இவரது நடிப்பில் 13 வருடங்களுக்கு முன் உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் கமிட்டாகி இருக்கிறார்.கடந்த ஆண்டு தனது காதலர் நிகோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் ஜீ தமிழில் நடைபெற்று வரும் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார்.இந்நிலையில், கையில் கட்டுடன் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதில், அவர் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை காட்சியில் தனது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் குணமடைந்தவுடன் விரைவில் படப்பிடிப்பில் இணைந்துவிடுவேன் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன