Connect with us

இலங்கை

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையதல்ல – இராமலிங்கம் சந்திரசேகர் எம்.பி!

Published

on

Loading

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையதல்ல – இராமலிங்கம் சந்திரசேகர் எம்.பி!

கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
 
கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சந்தித்த அமைச்சர் இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். 
 
இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 
 
இலங்கை, தமிழ் நாட்டு மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை என்பதுடன், இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாகக் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்திய மீனவர்களைக் கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. 
 
அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. 
 
எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைப்பிடிப்பதாலுமே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். 
 
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. 
 
இந்தநிலையில் தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன