Connect with us

தொழில்நுட்பம்

நாசா விண்வெளி வீரர்களை மீட்கும் பணி வெற்றி; புதிய குழுவை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்

Published

on

spacex

Loading

நாசா விண்வெளி வீரர்களை மீட்கும் பணி வெற்றி; புதிய குழுவை வரவேற்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்

விண்ணில் ஏவப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் குழுவினர் அடங்கிய காப்ஸ்யூல் (விண்கலம்) ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்து சேர்ந்தது, இந்த குழுவினர் நாசா மூலம் அனுப்பப்பட்டு விண்வெளியில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களுக்கான மாற்றுகளை வழங்கினர்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு புதிய விண்வெளி வீரர்கள், அடுத்த சில நாட்களில் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸிடமிருந்து விண்வெளி நிலையத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்.பின்னர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் இந்த வார இறுதியில் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூலில் இணைந்து பூமிக்கு திரும்புவதன் மூலம், கடந்த ஜூன் மாதம் தொடங்கிய எதிர்பாராத நீட்டிக்கப்பட்ட பணியை முடிப்பார்கள். போயிங்கின் முதல் விண்வெளி விமானத்தில் புறப்பட்ட புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் ஒரு வாரத்திற்கு பிறகு விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாரா சூழலில், அங்கு தங்க வேண்டியிருந்ததால் இந்த மாத தொடக்கத்தில் இருவரும் ஒன்பது மாத காலத்தை எட்டினர்.போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் பல சிக்கல்களைச் சந்தித்ததால், நாசா அதை காலியாகத் திரும்ப பெற முடிவு செய்தது, மேலும் அதன் சோதனை விமானிகளை ஸ்பேஸ்எக்ஸ் லிஃப்ட் வரும் வரை காத்திருக்க வைத்தது. அவர்களின் பயணம் செப்டம்பர் மாத இறுதியில் இரண்டு பேர் கொண்ட குறைக்கப்பட்ட குழுவினருடனும், இரண்டு காலி இருக்கைகள் ஒதுக்கப்பட்டதாகவும் இருந்தது. ஆனால் அவற்றின் புதிய காப்ஸ்யூலுக்கு விரிவான பேட்டரி பழுதுபார்ப்பு தேவைப்பட்டதால் அதிக தாமதங்கள் ஏற்பட்டன.ஒரு பழைய காப்ஸ்யூல் அதன் இடத்தைப் பிடித்தது, மார்ச் நடுப்பகுதி வரை அவர்களின் வருகையை இரண்டு வாரங்கள் அதிகரித்தது. வானிலை அனுமதித்தால், வில்மோர், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் புதன்கிழமைக்கு முன்னதாக விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து புளோரிடாவின் கடற்கரையில் விழும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன