சினிமா
பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் டிராகன்…! – 25வது வெற்றி விழாவைக் கொண்டாடிய படக்குழு!

பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் டிராகன்…! – 25வது வெற்றி விழாவைக் கொண்டாடிய படக்குழு!
தமிழ் சினிமாவில் புதிய பரிமாணம் கொண்ட எமோஷனல் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக உருவான ‘டிராகன்’ படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் தற்பொழுது வெற்றிகரமாக 25வது நாளில் அடியெடுத்தும் வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள படக்குழு வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.தனது முதல் படமான ‘லவ் டுடே’ மூலம் தமிழ் சினிமாவுக்கு புதிய கதையம்சத்தை வழங்கிய நடிகர் மற்றும் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படம் மூலம் மற்றுமொரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இப்படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குநரான மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ரசிகர்கள் திரையரங்குகளில் செய்த கொண்டாட்டம் மற்றும் வசூல் சாதனைகள் ஆகியவை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. மேலும் ‘டிராகன்’ படம் தமிழ் சினிமாவின் 2025ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக திகழ்கின்றது. அத்துடன் இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டு அனைவரையும் சந்தோசத்தத்தில் ஆழ்த்தியுள்ளார. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படம் 100 நாட்கள் ஓட வேண்டும் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.