Connect with us

இலங்கை

வடக்கின் கடற்றொழில் சமூகத்தை கருவறுத்து ஏப்பமிடுவதை அனுர அரசு நிறுத்த வேண்டும் – அன்னராசா! 

Published

on

Loading

வடக்கின் கடற்றொழில் சமூகத்தை கருவறுத்து ஏப்பமிடுவதை அனுர அரசு நிறுத்த வேண்டும் – அன்னராசா! 

குறைபாடுகள் இருந்தும் மக்களின் கருத்துக்கு கடந்தகால அரசாங்கம் செவிசாய்த்து திட்டங்களை முன்னெடுத்த நிலையில் தற்போதைய அனுர அரசாங்கம் வடக்கின் கடற்றொழில் சமூகத்தின் கருவறுத்து ஏப்பமிடும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது என  வடக்கின் கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் (16) யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

Advertisement

அனுர அரசு ஆட்சிக்கு வர முன்னர் நாட்டை ஊழலற்றதாக மற்றுவோம் என கூறி ஆட்சிக்கு வந்தனர்.ஆனால் ஆட்சியை பிடித்தபின் தனது நிலைப்பாடை முழுமையாக மாற்றியுள்ளது. இது வாக்களித்த வடக்கு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று வடக்கில்  பாரம்பரிய சிறு கடற்றொழிலாளர்கள் பல்வேறு வகையில் தொடர்ந்தும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். அண்மையில் வடக்கின் ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்று அதில் பல தீர்மனமானங்கள் எடுக்கப்படுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக முறையற்ற வகையில் தகவல்களை வழங்கி மீனவர்களுக்கிடயே  குழப்பங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை நடக்கின்றது.கடலட்டைப் பண்ணைகளை நாம் முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஆனால் பண்ணைகளுக்காக காணிகள் அதிகாரிகளதும், அரசியல்வாதிகளதும் விருப்புக்கேற்ப வழங்கப்படுகின்றது. நாம் வடக்கின் ஆளுனரிடம் கேட்கின்றோம் கடற்காணிகளை வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு  கொடுத்தது யார்? பதில் சொல்லுங்கள்.

இந்நேரம் கடலட்டைப் பண்ணைகளை அகற்றினால் நாட்டின் வருவாய் குறையும் என்று கூறியுள்ளார் அவ்வாறாயின் சிறு கடற்றொழில் செய்துவரும் தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்? கடல்மீது உள்ள அக்கறையின் பால் தான் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

Advertisement

முறையற்ற வகையில் வழங்கப்படும் பண்ணைகளை தொடர்ந்தும் சட்டவிரோதமாக வழங்குவதை நிறுத்தாவிடின் நாம் தொழில் நடவக்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவோம். எனவே வடக்கின் கடற்றொழில் சமூகத்தின் கருவறுத்து ஏப்பமிடும் செயற்பாட்டை முன்னெடுப்பதை அனுர அரசும் வடக்கின் ஆளுனரும் கைவிட வேண்டும் எனவும் 

வடக்கின் கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதி அன்னலிங்கம் அன்னரசா வலியுறுத்தினார். இதேவேளை தமிழக மீனவ கைது தொடர்பில் கூறுகையில்  – சட்டவிரோத செயற்பாட்டை இந்திய தரப்பினர் கைவிட வேண்டும். கச்சதீவு என்பது சமய ரீதியான் ஒன்று. அதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன