இலங்கை
வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு!

வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு!
வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் பொதுச்சபை கூட்டமும் நேற்றையதினம் மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரி கஜானா கெங்காதரன் தலைவராகவும், அ.இன்பராசா செயலாளராகவும், திரு.பேரின்பநாதன் பொருளாளராகவும், திரு.குலசிங்கம் உப தலைவராகவும், திருமதி. கலைமதி உப செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் வட்டுக்கோட்டையை பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இருந்து ஒவ்வொரு நிர்வாக சபை உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டதுடன், கணக்காய்வாளர்களாக பு.கஜிந்தன் மற்றும் திருமதி. தாரணி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாகத் தெரிவின் பின்னர் மருத்துவமனையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. பின்னர் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுக்கு வந்தது. (ப)