இலங்கை
விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை : சிங்கப்பூரில் இருந்து வந்தவர் கைது!

விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை : சிங்கப்பூரில் இருந்து வந்தவர் கைது!
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
வருகையின் போது, சந்தேக நபர், அதிக குடிபோதையில் இருந்ததாகவும், அவர் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை