தொழில்நுட்பம்
Apple iOS 19: புதிய வடிவமைப்பு முதல் ஸ்மார்ட்டர் சிரி வரை; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ!

Apple iOS 19: புதிய வடிவமைப்பு முதல் ஸ்மார்ட்டர் சிரி வரை; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ!
ஆப்பிள் கடந்த ஆண்டு ஐ.ஓ.எஸ் 18-ஐ வெளியிட்டபோது, முன்னர் இல்லாத வகையில் பெரிய மாறுதல்களுடன் இருந்தது. அதனடிப்படையில், ஐ.ஓ.எஸ் 19 அறிவிப்புக்கு மூன்று மாதங்களே இருப்பதால், அந்த இயங்குதளத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இணையத்தில் பல தகவலகள் உலா வருகின்றனர். அந்த வகையில் நாங்கள் பெற்ற சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் படிக்கவும்: Apple iOS 19: From new design to smarter Siri, here’s everything we know so far ஐ.ஓ.எஸ் 19 புதிய அம்சங்கள்: ப்ளூம்பெர்க் மார்க் குர்மனின் கூற்றுப்படி, நிறுவனத்தின் வரலாற்றில் ஐ.ஓ.எஸ் 19, மிகவும் வியத்தகு மென்பொருள் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயங்குதளத்தின் அடிப்படை தோற்றமே மாற்றம் அடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவல் உண்மை எனில், புதிய ஐகான்கள், மெனுக்கள், பயன்பாடுகள் போன்றவற்றைக் காணக் கூடும். மேலும், இதில் புதுப்பிக்கப்பட்ட கேமரா பயன்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் புகைப்படங்களை வெவ்வேறு மோடுகளில் மாற்றக் கூடிய வசதி இருக்கலாம் என்று பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏ.ஐ கொண்டு இயங்கும் சிரிஆப்பிள் நுண்ணறிவு பெரும்பாலும் மிகவும் குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.ஓ.எஸ் 19 இந்தக் கூற்றை மாற்றக் கூடும். ஆப்பிள் இயங்குதளத்தில் இருக்கும் சிரி பயன்பாடு, இனி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் என் வல்லுநர்கள் கூறுகின்றனர். இது சாட் ஜிபிடி, க்ளாட், ஜெமினி போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கலாம்.ஐ.ஓ.எஸ் 19 வெளியீட்டு தேதிஅனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஜூன் மாதத்தில் WWDC நிகழ்வில் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 19 முன்னோட்டம் இருக்கும். இது செப்டம்பர் மாதத்தில் புதிய போன்களுடன் சந்தைக்கு வரலாம்.எந்த ஐபோன்கள் ஐ.ஓ.எஸ் 19 ஐப் பெறும்?உங்கள் ஐபோன் ஐ.ஓ.எஸ் 18 புதுப்பிப்பைப் பெற்றிருந்தால், அது ஐ.ஓ.எஸ் 19 பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். iPhoneSoft இன் சமீபத்திய அறிக்கையின்படி, ஐ.ஓ.எஸ் 19 புதுப்பிப்பைப் பெறும் ஆப்பிள் சாதனங்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளன.ஐபோன் XRஐபோன் XSஐபோன் XS மேக்ஸ்ஐபோன் 11 ப்ரோஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 12ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 12 மினிஐபோன் 13ஐபோன் 13 ப்ரோஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 13 மினிஐபோன் 14ஐபோன் 14 பிளஸ்ஐபோன் 14 ப்ரோஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 15ஐபோன் 15 பிளஸ்ஐபோன் 15 ப்ரோஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்ஐபோன் 16ஐபோன் 16 பிளஸ்ஐபோன் 16 ப்ரோஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்ஐபோன் SE (2nd gen)ஐபோன் SE (3rd gen)