நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 18/03/2025 | Edited on 18/03/2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜித்துடைய காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

முன்னதாக இப்படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் இளமை தோற்றத்தில் இடம் பெற்றிருந்த நிலையில் அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக சிறிய வீடியோ மூலம் படக்குழு வெளியிட்டது. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான் எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. 

Advertisement

இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அதோடு வருகிற 18ஆம் தேதி ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) என்ற முதல் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.  பின்பு ‘ஓஜி சம்பவம்’ பாடலின் புரோமோ நேற்று மாலை வெளியானது. இந்த நிலையில் படக்குழு அறிவித்தது போல் ‘ஓஜி சம்பவம்’ பாடல் லிரிக் வீடியோவுடன் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பாடியுள்ளனர். விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அஜித் இப்படத்தில் ஏ.கே. எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அதை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் அஜித் கதாபாத்திரத்தை படக்குழு ஒரிஜினல் கேங்க்ஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. இப்பாடலில் மேலும் அஜித்தின் முந்தைய ஹிட் படங்களின் ரெஃபரன்ஸுகள் மற்றும் வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் இப்பாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.