Connect with us

இலங்கை

இம்முறை பல தேர்தல் வியூகங்களை செய்துள்ளோம்! சாணக்கியன்

Published

on

Loading

இம்முறை பல தேர்தல் வியூகங்களை செய்துள்ளோம்! சாணக்கியன்

இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 இலங்கை தமிழரசுக்கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை இன்று செலுத்தியது.

Advertisement

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 11 உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கு இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு உதவி தேர்தல் அலுவலகத்தில் இன்றைய தினம் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

 இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்.பி.,

Advertisement

 மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளோம். காத்தான்குடி நகரசபையைத் தவிர்த்து ஏனைய சபைகளுக்கான கட்டுப்பணம் இன்று எம்மால் செலுத்தப்பட்டுள்ளது.

 கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 96000 வாக்குகளைப் பெற்றிருந்தோம். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் வகையில் தேர்தல் வியூகங்களை அமைத்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது என்பதைத் தாண்டி கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.

Advertisement

 2020ம் ஆண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் அட்சி பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலிலே நாங்கள் அதிகளவான வாக்குகளைப் பெற்றோம். அதே போலவே இந்தத் தேர்தலிலும் எங்களுக்கு வட்டாரங்கள் வெல்வதும், உள்ளூராட்சி சபகளை ஆட்சி செய்வதையும் விடவும் கட்சியின் வாக்கு வங்கியினை அதிகரித்தலினூடாக இந்த இரண்டு விடயங்களையும் நாங்கள் மிகவும் இலகுவாகச் செய்து முடிக்கலாம்.

 இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. 

இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது.

Advertisement

ஏனெனில் 2018ம் ஆண்டு இந்தத் தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது அதிலே கற்றுக் கொண்ட பாடங்களை வைத்து 2023ம் ஆண்டு தேர்தலில் சில சில மாற்றங்களைச் செய்தோம் அதிலும் சில குறைபாடுகளை அவதானித்து தற்போது 2025ம் ஆண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்து சிறந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்திருக்கின்றோம்.

 இன்னும் ஓரிரு நாளில் வேட்புமனுத் தாக்கலை நாங்கள் செய்வோம். தற்போது இந்தத் தேர்தல் முறையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டமையால் பல இளைஞர்களுக்கு இடம்கொடுத்துள்ளோம். அந்த அடிப்படையிலும் இம்முறை வேட்பாளர் தெரிவில் பல மாற்றங்களைச் செய்துள்ளோம்.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன