பொழுதுபோக்கு
கன்டென்ட் மட்டும் தான் அடல்ட: இது குடும்ப பாங்கான படம் தான்; பெருசு பட டீம் பேட்டி!

கன்டென்ட் மட்டும் தான் அடல்ட: இது குடும்ப பாங்கான படம் தான்; பெருசு பட டீம் பேட்டி!
பெருசு திரைப்படத்தை பார்க்க கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் வந்த நடிகர் வைபவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மார்ச் 14″ம் தேதி பெரிசு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இதற்காக கோவை மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரடியாக பட குழுவினர் வந்து வந்திருக்கிறோம். பொது மக்களுக்கு எந்த படம் நன்றாக ஓடும் ஓடாது என்பது தெரியும். குடும்பப்பாங்கான படத்தை விரும்பி பார்க்கிறார்கள்.எங்களின் படத்தை நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் பார்த்து இருக்கிறார்கள். ஒரு புது விதமான கதையோடு இப்படம் இயக்கப்பட்டு இருக்கிறது. நிறைய காமெடி நடிகர்கள் சேர்ந்து நடித்து இருப்பதால், நல்ல காமெடி படம் நன்றாக வந்து இருக்கிறது. மலையாள படங்களை பார்க்கும்போது திரைப்படம் நன்றாக வெளி வந்து இருக்கிறது என்று கூறுவோமே அதைப் போலவே இதுவும் நன்றாக பிளாக் ஹியூமரோடு வெளி வந்து இருக்கிறது.தமிழ்நாட்டை தவிர்த்து மலேசியா சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்ரீலங்கா உள்ள பகுதிகளில், படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.படம் நன்றாக ஓடுகிறது என தமிழ்நாடு கர்நாடகா போன்ற பகுதிகளில் மக்கள் கூறியதை தொடர்ந்து கேரளாவில் படத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது. தற்போதைய கால கட்டங்களில் கண்டன்ட் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, இங்கு ஹைய் பட்ஜெட், லோ பட்ஜெட் என்பது இரண்டாம் கட்டம் தான். படம் என்று எடுத்துக் கொண்டால் கதை தான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இப்ப இருக்கக் கூடிய ஆடியன்ஸ் எல்லோரும் படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு சென்று தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். அதுதான் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. சமூக விழிப்புணர்வு, படங்கள் நிச்சயம் தேவை தான். அதே போல ஒரு சமூகம் ஒரு திரைப்படத்தை பார்த்து தான் திருந்த வேண்டும் என்றால், என்னுடைய கருத்தியலுக்கு அது ஒத்துப் போகாது. நம்முடைய சமூகம் மிகவும் பழமை வாய்ந்தது. திரைப்படத்தைப் பார்த்து அவர்கள் விழிப்புணர்வு ஏற்படக் கூடிய அவசியம் இல்லை. நம்முடைய புறங்காவியங்களை படித்தாலே நிறைய விழிப்புணர்வு ஏற்படும். அது போன்ற திரைப்படங்களும் தேவை தான் இல்லை என்று நான் கூறவில்லை. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ஆடியன்ஸ்சும் இருக்கிறார்கள் படம் நன்றாக இருந்தால் நிச்சயம் தியேட்டருக்காக வருகிறார்கள். அதேசமயம் சிலர் ஃபோன்களில் படம் பார்ப்பவர்களும் உண்டு. இது போன்ற சம்பவங்கள் பெரிய புரட்சி அளவில் சிரமப்பட்டு படம் எடுக்கும்போது அதை செல்போன்களில் பார்க்கும் அளவுக்கு வெளியிடுகிறார்கள். என்றால் அது வருத்தத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாகவே இருக்கிறதுகதையில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும், பொறுமையாக தான் இருக்கும். அந்தக் கதைக்கு தேவையானவர்கள் யாரோ அவர்கள் வந்து செல்வார்கள். படத்திற்கு கதைக்களம், கதை, தேவையான ஆட்கள் மிகவும் முக்கியம். அதில் வரக் கூடிய ஆட்கள் பொருந்தக் கூடிய வேடங்களில் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இருக்கும். கதாபாத்திரங்கள் தேவையானவற்றை ஏற்று இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்து இருப்பவர்களின் கதாபாத்திரங்கள் நிறைவடைந்தவையாக இருக்கிறது.அந்த காலத்தில் இருந்தே டப்பிங் செய்து படங்கள் வெளியிடப்படுவது இருக்கிறது. அதுவும் தற்போது ஒடிடி என்று எடுத்துக் கொண்டால் அனைத்து படங்களுமே, நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதனால் நாம் எடுக்கும் படங்களில் புதிதாக ஏதாவது இருந்தால் மட்டும் தான் மக்களை தியேட்டருக்கு வர வைக்க முடியும் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய நடிகர் கருணாகரன் கூறுகையில், பெருசு படத்தை ரிவ்யூ செய்த அனைத்து ரிவ்யூவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், ஒரு புதுமையான கதையை கொண்ட திரைப்படத்தை, இதுதான் கதை என்று பெரிதாக கூறாமல் நல்ல பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்து இருக்கிறார்கள், அதற்காகவே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை சாந்தினி, நிறைய நாட்கள் கழித்து பெருசு திரைப்படத்தை பார்க்க பெண்கள் கூட்டமாக வருவதை என்னால் பார்க்க முடிகிறது. கன்டென்ட் மட்டும் தான் “A”content ஆக இருக்கிறது. மற்றபடி படம் அனைத்துமே குடும்ப பங்கான படமாக இருக்கிறது. அனைவரும் தியேட்டருக்கு வந்து நிச்சயம் படத்தை பார்த்துச் செல்ல வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.பி.ரஹ்மான் கோவை மாவட்டம்