சினிமா
“கூலி” படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!

“கூலி” படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் எப்பொழுதும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருபவர். அவருடைய ‘ஜெயிலர்’ மற்றும் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்பொழுது அவர் நடிக்கும் ‘கூலி’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.பல மாதங்களாக தீவிரமாக நடைபெற்ற ‘கூலி’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் தற்பொழுது முடிவடைந்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததை ஒட்டி, படக்குழுவினர் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் ரஜினி செம மாஸாக காணப்படுகின்றார்.ஏற்கனவே, பேட்ட , ஜெயிலர் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்ததுடன் அந்தப் பாடல்கள் அனைத்தும் ரஜினிக்கு சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. அந்தவகையில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.