Connect with us

இலங்கை

பட்டலந்த அறிக்கையை வைத்து இராணுவத்துக்கு எதிராகவும் விசாரணை நடக்கும்!

Published

on

Loading

பட்டலந்த அறிக்கையை வைத்து இராணுவத்துக்கு எதிராகவும் விசாரணை நடக்கும்!

சர்ச்சையைக் கிளப்புகிறார் வீரசேகர

வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி, அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு புலம்பெயரிகள் ஆணைக்குழுவொன்றை கோரக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
ஸ்ரீலங்கா படையினர் போர்க்குற்றம் இழைக்கவில்லை. பரணகம குழுவில் இருந்த சர்வதேச நிபுணர்களும் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். உலகிலேயே பெருமளவில் பணயக்கைதிகளை மீட்டு போரை முடித்த இராணுவம்தான் எமது நாட்டில் உள்ளது.

எனவே, போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் எமக்குள்ள குற்றச்சாட்டுகள் போலியானவையாகும். எனினும், குற்றச்சாட்டுகள் உண்மையென்பதை காண்பிப்பதற்கு, பட்டலந்த அறிக்கை பயன்படுத்தக்கூடும். பட்டலந்த அறிக்கை இங்கு வெளியாவதால், வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் டயஸ்போராக்கள் விசாரணை கோரலாம். எனவே, ஜெனிவா மாநாட்டில் பட்டலந்த அறிக்கை எதிரொலிக்கக்கூடும்’ – என்றார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன