Connect with us

வணிகம்

“பி.எம் பயிற்சி திட்டம்; தேச நலனுக்காக பல நிறுவனங்கள் முன்வர வேண்டும்”: நிர்மலா சீதாராமன்

Published

on

Nirmala Sita

Loading

“பி.எம் பயிற்சி திட்டம்; தேச நலனுக்காக பல நிறுவனங்கள் முன்வர வேண்டும்”: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், மிகப்பெரும் தேசி நலனைக் கருத்திற் கொண்டு, பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் (PMIS) அதிக நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டம் தற்போது இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது. இந்தத் திட்டம் 327 நிறுவனங்களிடமிருந்து பயிற்சிக்கான ஒப்புதல்களை பெற்றுள்ளது. முதல் கட்டத்தில் இதன் எண்ணிக்கை 280 ஆக இருந்தது. ஆங்கிலத்தில் படிக்கவும்: PM Internship Scheme a ‘national cause’, more companies need to chip in: Sitharaman கடந்த ஜூலை மாதம் 2024 – 25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஐந்து ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.”இந்த இரண்டாம் கட்டத்தில், பல நிறுவனங்கள் முன் வந்து பயிற்சி வழங்குவதற்குத் தயாராக இருப்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால், தேச நலனை கருத்திற் கொண்டு இதில் 500 நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என்று நோக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். அதற்காக நாம் இன்னும் முன்னேற வேண்டும்” என்று திங்களன்று PMIS மொபைல் செயலியின் வெளியீட்டு விழாவில் நிர்மலா சீதாராமன் கூறினார். இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் மாதந்தோறும் ரூ. 4,500 நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும். மேலும் ரூ. 500 ஆஃப்செட் நிறுவனத்தின் CSR (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) நிதி மூலம் வழங்கப்படும்.கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட முதல் சுற்றில், 1.27 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 82,000-க்கும் மேற்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. இன்டர்ன்ஷிப் சலுகைகளை ஏற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை முதல் சுற்றில் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. பிப்ரவரி 6 வரை வெறும் 8,000 பேர் மட்டுமே சலுகைகளைப் பெற்றனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்திருந்தது.ஜனவரியில் தொடங்கிய இரண்டாவது சுற்றில், 735 மாவட்டங்களில் சுமார் 1.18 லட்சம் வேலைவாய்ப்புகள் பெறப்பட உள்ளன. இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.இப்போது, ​​PMIS மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் சமீபத்தில் அறிவித்த பரிந்துரை திட்டத்தை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது சுற்றில் திட்டத்திற்கான அணுகலை அதிகரிக்கவும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. “PMIS போர்ட்டலின் டாஷ்போர்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது. மாநில அரசுகள், தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள், கல்லூரிகள் போன்றோர் 80-க்கும் மேற்பட்ட அவுட்ரீச் நிகழ்வுகளில் இளைஞர்களுடன் உரையாடினர்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்களின் இன்டர்ன்ஷிப்பின் போது ஏற்படும் இதர செலவுகளை ஈடுகட்ட, ஆண்டுக்கு ரூ. 6,000 என ஒரு முறை மானியத்தை அரசாங்கம் வழங்குகிறது.2024 – 25 பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறமைக்கான ஒரு பகுதியாக இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் இருந்தது. முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு ரூ. 2,000 கோடி வழங்கப்பட்டது.2024 – 25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில், திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 380 கோடியாக குறைக்கப்பட்டது. 2025 – 26 ஆம் ஆண்டிற்கான, ரூ. 59.77 கோடி மூலதனச் செலவு உட்பட, ரூ. 10,831 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளது.- Aggam Walia

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன