Connect with us

இலங்கை

மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Published

on

Loading

மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் இளைஞர்களிலிருந்து பெரியவர்கள் வரை என அனைவருக்கும் மன அழுத்தம் என்பது ஒரு பெரிய நோயாக இருக்கின்றது.

சில நேரங்களில் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது அலுவலகத்திலோ எந்தவொரு பிரச்னைகளும் இல்லை என்றாலும் மன அழுத்தமாகவும் சோர்வாகவும் உணர்வோம். ஆனால் இதற்கு என்ன காரணம் என்றும் தெரியாது. அப்படி நீங்களும் உணர்கிறீர்கள் எனில் இவற்றை செய்து பாருங்கள். மாற்றத்தை உணரலாம்.

Advertisement

அதாவது குறைந்தது அரை மணி நேரமாவது கண்களை மூடி நன்கு மூச்சை இழுத்து விட்டு தியானம் செய்து பாருங்கள். பிடித்த பாடல் கேட்பது, புத்தகம் வாசிப்பது இப்படி எதாவது செய்யுங்கள். இதனால் உங்கள் மனது சற்று இலகுவாகும்.

மன அழுத்ததிற்கு ஆரோக்கியமற்ற உணவுகளும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். இதனால் உடலும் , மனதும் சேர்ந்து உறுதியாகும்.

மன அழுத்தம், சோர்வு என உணரும்போது தூக்கம் கட்டாயம் தேவை. ஏனெனில் அதுதான் நமக்கு முழு தெளிவை கொடுக்கும். பிரெஷாக இருக்கும். எனவே சோர்வாக இரவெல்லாம் கண்டதை நினைக்காமல் ரிலாக்ஸாக நன்கு தூங்குங்கள். நல்ல தூக்கத்தை தினசரி பழக்கமாக்குங்கள்.

Advertisement

உடற்பயிற்சி செய்வதும் நம்மை பிரச்னைகளை மறந்து ஓய்வாக இருக்கச் செய்யும். தசைகள் இலகுவாகி உடலுக்குக் கிடைக்கும் புத்துணர்ச்சி நம் மனதிற்கும் உற்சாகமளிக்கும். எனவே உடற்பயிற்சி, ஜாகிங், வாக்கிங் இப்படி உங்கள் வசதிக்கு ஏற்ப எதாவது ஒன்றை தினமும் கடைபிடியுங்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன