இலங்கை
யாழ் வடமராட்சியில் இரண்டு பரல் கோடா, இருபது லீட்டர் கசிப்பு மீட்பு!..

யாழ் வடமராட்சியில் இரண்டு பரல் கோடா, இருபது லீட்டர் கசிப்பு மீட்பு!..
யாழ்ப்பாணம் – வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இரண்டு பரல் கோடா, இருபது லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு தயாரிக்கும் உபகரணங்களும் இன்று மீட்கப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (ப)