இலங்கை
வவுனியா தேவகுளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு!

வவுனியா தேவகுளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு!
வவுனியா தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் அவர் கொண்டுவந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.