Connect with us

இலங்கை

304 குறை நிரப்பு நியமனங்களை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம்!..

Published

on

Loading

304 குறை நிரப்பு நியமனங்களை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம்!..

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கத்தினர் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை இன்று 2025/03/17 திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

Advertisement

ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு உடனடி நியமனங்களை வழங்குதல்.

தற்போது உள்ளகப்பயிற்சி பெற்று வரும் 374 உள்ளக மருத்துவ அலுவலர்களுக்கு அவர்களின் பயிற்சி முடிந்தவுடன் உடனடி நியமனங்களை வழங்குதல்.

எதிர்வரும் ஆண்டுகளில் இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியை முடித்தவுடனேயை உடனடி நியமனங்களை வழங்குதல், நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுதேச மருத்துவர் எண்ணிக்கையையும் சமூகநல மருத்துவர் எண்ணிக்கையையும் அதிகரித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Advertisement

அந்தவகையில், சுவசிறிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் 304 குறைநிரப்பு நியமனங்களை முதற்கட்டமாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது. (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன