Connect with us

இலங்கை

குடிநீர் பிரச்சனையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் ; உறவினர்கள் திகைப்பு!

Published

on

Loading

குடிநீர் பிரச்சனையால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் ; உறவினர்கள் திகைப்பு!

  இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம்  ஒன்று  பதிவாகியுள்ளது.

கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை அன்று திருமண வரவேற்பு நடைபெற்றது.

Advertisement

அப்போது கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை என மணப்பெண் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

அது தொடர்பில் மணப்பெண், மணமகன் என இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு முகூர்த்தம் திட்டமிடப்பட்ட நிலையில், குடிநீர் தகராறு இரவில் இருந்து காலை வரை தொடர்ந்தது.

Advertisement

இந்நிலையில் பல சமரச முயற்சிகள் ஏற்பட்ட போதிலும் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.

இறுதியில் மணமகளும், மணமகனுமே சண்டையில் ஈடுபட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்  குடிநீரால்  எழுந்த  பிரச்சனை  திருமணத்தை நிறுத்தும் நிலைக்கு சென்றமை   திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன