Connect with us

சினிமா

செம ஸ்டைலா விருது வாங்கிய தமன்னா..! இன்ஸ்டாவில் ரெண்டான லேட்டஸ்ட் வீடியோ..!

Published

on

Loading

செம ஸ்டைலா விருது வாங்கிய தமன்னா..! இன்ஸ்டாவில் ரெண்டான லேட்டஸ்ட் வீடியோ..!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அண்மையில் நடந்த பிரமாண்ட விருது விழாவில் பங்கேற்றிருந்தார். தமன்னா அதில் அணிந்திருந்த ஸ்டைலான உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நிகழ்வில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.சிவப்பு மற்றும் கறுப்பு நிறக்கலவையில் வடிவமைக்கப்பட்ட ஆடையில் மிகுந்த எளிமையுடனும் அழகுடனும் காணப்பட்டார். புகைப்படங்களில் அவரது அழகைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் “அழகுனா இதுதான் அழகு” என அவரைப் பாராட்டி வருகின்றனர்.கடந்த வருடத்தின் படங்கள் அவரை இந்த விருதுக்குத் தகுதியானவராக மாற்றியுள்ளன. விருது பெற்ற போது, அவர் உருக்கமான நன்றியுரை நிகழ்த்திய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.விருது விழாவுக்காக அவர் தேர்வு செய்த உடை பற்றியும் அவருடைய ஸ்டைலான தோற்றத்தைப் பற்றியும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள்  ‘இந்த உடை வேற லெவல்!’ எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வாறு பல ரசிகர்கள் அவரது அணுகுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். தற்பொழுது அவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. விருது விழாவின் புகைப்படங்களுடன் அவரது அடுத்த பயணத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன