பொழுதுபோக்கு
90-களில் முன்னணி நடிகை: இப்போ அரசியல் பிரபலம்; இவர் யார்னு தெரியுதா?

90-களில் முன்னணி நடிகை: இப்போ அரசியல் பிரபலம்; இவர் யார்னு தெரியுதா?
1988-ம் ஆண்டு ரஜினிகாந்த் பிரபு நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குஷ்புஅடுத்து கார்த்தியுடன், வருஷம் 16, பிரபு மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்த வெற்றி விழா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.சரத்குமாருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள குஷ்பு மெகாஹிட் படமாக நாட்டாமை படத்திலும் நடித்திருந்தார்.திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ள குஷ்பு, தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.தி.மு.க வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த குஷ்பு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.