Connect with us

இலங்கை

தமிழர் பகுதியில் வீதிகளை ஆக்கிரமித்த கால்நடைகள் ;களத்தில் இறங்கிய அதிகாரிகள்

Published

on

Loading

தமிழர் பகுதியில் வீதிகளை ஆக்கிரமித்த கால்நடைகள் ;களத்தில் இறங்கிய அதிகாரிகள்

வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் (20) இரவு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

Advertisement

எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்திய பின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன