இந்தியா
வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல்: முக்கிய சாலைகளில் பசுமை பந்தல் அமைத்த புதுச்சேரி அரசு

வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல்: முக்கிய சாலைகளில் பசுமை பந்தல் அமைத்த புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் கடும் வெயில் தாக்கத்தால் போக்குவரத்து சிக்னலில் நிற்கக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒவ்வொரு சிக்னலிலும் வாகன ஓட்டிகளை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, புதுச்சேரி பொதுப்பணித்துறை மூலம் 15 இடங்களில் பசுமை பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளை கடும் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வருகிறது.இந்த செயல்திட்டத்தால் வாகன ஓட்டிகள் புதுவை அரசுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். முதன் முதலில் இருந்த செயல் திட்டத்தை அப்துல் கலாம் பேரவை சார்பில் சம்பத் எம்.எல்.ஏ ஆரம்பித்து செயல்படுத்தினார். அதன் பின்பு இந்த செயல் வாகன ஓட்டிகளிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்றது.சித்திரை மாதம் வருவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கின்ற சூழலில் தற்போது வெயில் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒவ்வொரு சிக்னலில் ராட்சத பசுமைப் பந்தல் அமைத்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன்