சினிமா
தனுஷின் NEEK படம் ஓடிடி ரிலீஸ்!! அனிகா சுரேந்திரனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

தனுஷின் NEEK படம் ஓடிடி ரிலீஸ்!! அனிகா சுரேந்திரனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார். பின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.சமீபத்தில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.படம் ரிலீஸாகிய போது படத்திற்கு கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், ஓடிடி தளத்தில் தற்போது ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.அதிலும் அனிகா சுரேந்திரன் எமோஷ்னலாக நடித்த காட்சியையும் தனுஷ் எப்படி அவரை நடிக்க வைத்தார் என்றும் படுமோசமாக கலாய்த்து மீம்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.ஆனால் அதிலும் மேத்யூ தாமஸுக்கு போட்டுள்ள மியூஸ் கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.