விநோதம்
பூமியை விட 5 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியை விட 5 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியது என நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.
முக்கியமாக, புதிய கிரகத்தில் கணிசமான அளவு வைரங்கள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கிரகத்தின் நிறை, மூன்றில் ஒரு பங்கு வைரங்களால் ஆனது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த கிரகத்தில் வைரம் போன்ற கார்பன் சார்ந்த கட்டுமானங்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.