வணிகம்
முதுமையை நினைத்து கவலை வேண்டாம்; நீங்கள் முதலீடு செய்ய அரசின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதோ!

முதுமையை நினைத்து கவலை வேண்டாம்; நீங்கள் முதலீடு செய்ய அரசின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதோ!
வயதான காலத்தில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் முக்கியமானது. ஓய்வூதியத்தின் போது நிதி பாதுகாப்பு மற்றும் மன அமைதியை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களை அரசாங்கம் வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் வழக்கமான வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் நிதிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF)ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். பணியாளர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பங்களிப்பதோடு, வேலை வழங்கும் நிறுவனமும் இதில் சமமான பங்களிப்பு அளிக்கும். தற்போதைய வட்டி விகிதம் 8.25% ஆகும். இந்த நிதி, 58 வயதில் முதிர்வு அடைகிறது. இது, திரட்டப்பட்ட வட்டியுடன் மொத்த தொகையை வழங்குகிறது. அவசர காலங்களில் இதனை பகுதி அளவாகவும் எடுத்துக் கொள்ளலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குக்கு இது தகுதி பெறும்.தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். இது தனிநபர்கள் பங்கு, அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பெருநிறுவனக் கடன் ஆகியவற்றில் பன்முகப்படுத்தப்பட்ட முதலீடுகளை உருவாக்க அனுமதிக்கிறது. சந்தை செயல்திறன் அடிப்படையில் இதன் வருமானம் மாறுபடும். சந்தாதாரர்கள் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளையும், பிரிவு 80CCD(1B)-ன் கீழ் கூடுதலாக ரூ. 50,000 வரையிலும் வரிச் சலுகைகளைப் பெறலாம்.பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY)பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். இது 10 ஆண்டுகளுக்கு 7.4% உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. சந்தை ஏற்ற இறக்கத்திற்கு எதிராக நிதி பாதுகாப்பை இத்திட்டம் வழங்குகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம் ஆகும். இந்தத் திட்டம் முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் நிலையான மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது முதிர்வு அடைந்த உடன், அதன் அசல் தொகை முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும்.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அதிக வட்டி செலுத்தும் திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போதைய வட்டி விகிதம் 8.2% ஆகும். இது பழமைவாத முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக உள்ளது. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 30 லட்சம் ஆகும். இதன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் வரை இருக்கும். இதனை கூடுதலாக 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம். காலாண்டுக்கு ஒருமுறை இதன் வட்டி செலுத்தப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டதில் உள்ள முதலீடுகள் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கு தகுதி பெறுகின்றன. இருப்பினும், பெறப்பட்ட வட்டிக்கு வரி விதிக்கப்படும்.பொது வருங்கால வைப்பு நிதி (PPF)பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். தற்போதைய சூழலில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இது 15 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. மேலும் 5 வருடங்களாக நீட்டிக்க முடியும். குறைந்தபட்ச ஆண்டு முதலீடு ரூ. 500 ஆகும். அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.அடல் பென்ஷன் யோஜனா (APY)அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை இலக்காகக் கொண்டு, ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது. சந்தாதாரர்கள் மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான நிலையான ஓய்வூதிய விருப்பங்களில் இருந்து தேர்வு செய்யலாம். ஓய்வூதிய தொகை மற்றும் திட்டத்தில் சேரும் நபரின் வயதைக் கொண்டு இதில் திட்டங்களை தேர்வு செய்யலாம். 40 வயதுக்கு முன் இதில் சேர்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான சந்தாதாரரின் பங்களிப்பில் 50% வரை அரசாங்கம் வழங்குகிறது.