Connect with us

உலகம்

5 வாரத்திற்கு பிறகு மருத்துவமனை விட்டு வெளியேறிய போப் பிரான்சிஸ்

Published

on

Loading

5 வாரத்திற்கு பிறகு மருத்துவமனை விட்டு வெளியேறிய போப் பிரான்சிஸ்

போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 

அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.

கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

Advertisement

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.

38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

images/content-image/1742747760.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன