Connect with us

இந்தியா

எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு; ஓய்வூதியம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

Published

on

Parliament salary

Loading

எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு; ஓய்வூதியம், கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 24 சதவீத உயர்வை அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்களவை உறுப்பினர்கள் ஏப்ரல் 1, 2025 முதல் மாதம் ரூ.1.24 லட்சம் பெறுவார்கள்.ஆங்கிலத்தில் படிக்க:இந்த சம்பளம் தவிர, பதவியில் உள்ள உறுப்பினர்களுக்கான தினசரி கொடுப்பனவுகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் அதிகரிக்கபட்டு திருத்தப்பட்டுள்ளன.நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாதம் ரூ.1 லட்சத்திற்கு பதிலாக ரூ.1.24 லட்சம் சம்பளம் பெறுவார்.எம்.பி.க்களின் தினசரி படி ரூ.2,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.25,000-லிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன