விளையாட்டு
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் – 11 பேர் கைது

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் – 11 பேர் கைது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 31 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று (மார்ச்-23) சேப்பாக்கத்தில் நடந்த சென்னை – மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்திய திருவல்லிக்கேணி போலீசார், கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகளை விற்க முயன்ற 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்து 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 11 பேரிடம் இருந்தும் ரூ.53,350 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.