பொழுதுபோக்கு
மேலாளர் பணமோசடி: ஹாட் டிஸ்கை கொடுங்க; பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா தர்ணா போராட்டம்

மேலாளர் பணமோசடி: ஹாட் டிஸ்கை கொடுங்க; பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா தர்ணா போராட்டம்
தான் பயோபிக் படத்தின் காட்சிகள் அடங்கிய ஹாட்டிஸ்க் கொடுக்கப்படவில்லை என கூறி, சென்னையில் தென்னிந்தி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அலுவலகம் முன்பு, நடிரக சோனா திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைபபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அடுத்து விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்த அவர், தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் க்ளாமர் கேரக்டர்களாகவே அமைந்துள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ள சோனா, ஒரு சில படங்களில் வில்லி கேரக்டரிலும் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறிய சோனா, சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா, மாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற வெப்சீரிஸை இயக்கி வரும் சோனா, இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என்று பலர் தன்னை மிரட்டி வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது, பெப்சி அலுவலகம் முன்பு சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், என்னிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் ரூ.8 லட்சம் வரை என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன். இது நம்ம குடும்பமாச்சே நமக்கு உதவுவார்கள் என்று இருந்தேன். ஆனால் இதுவரை உதவவில்லை. நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள்.எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என் ஹார்ட் டிஸ்க், எனது பணம் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து நான் போராடுவேன் என நடிகை சோனா தெரிவித்துள்ளார்.