விளையாட்டு
ருத்துராஜ் கேப்டன் ஆனா காரணம்… விராட்கோலி கேரக்டர் இதுதான்; மனம் திறந்த மிஸ்டர் கூல்!

ருத்துராஜ் கேப்டன் ஆனா காரணம்… விராட்கோலி கேரக்டர் இதுதான்; மனம் திறந்த மிஸ்டர் கூல்!
ஜியோ ஹாட்ஸ்டாரில் நடைபெற்ற தி எம்.எஸ்.டி எக்ஸ்பிரியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் சக வீரர் விராட்கோலி தொடர்பான கேள்விகளுக்கு உணர்ச்சிப்பூர்வமாக பதில் அளித்து உரையாடினார்.நான் எப்போதும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன், இன்னும் எவ்வளவு நாட்கள் விளையாடுவேனோ தெரியாது, ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை வியப்பில் ஆழ்த்துக்கிறது. ஒரு விளையாட்டு வீரராக, பலரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான். கிரிக்கெட்டிற்காக இந்தியா என்பது மிகப்பெரிய மேடையாக மாறியுள்ளது.நான் இப்போது இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாடவில்லை, என்றாலும் ஐபிஎல் கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.சென்னை சேப்பாக்கம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் மைதானமாகும்., ஏனெனில் ரசிகர்கள் விசிலுடன் மிகவும் ஆதருவு அளிக்கிறார்கள். சேப்பாக்கத்திற்கு பின் என்னை அதிகமாக பாதித்த மைதானங்களை தேர்வு செய்வது கடினம். மும்பைக்கு எனக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. 2007ல் நாம் டி20 உலகக் கோப்பையை வென்றபோது, இங்கு வந்தோம், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியும் மும்பையில்தான் நடந்தது, எனவே அது என் மனதில் ஒற்றுமை ஏற்படுத்தியது.அதேசமயம், பெங்களூருவில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை உருவாக்குகிறார்கள், கொல்கத்தாவில் மிகப்பெரிய மைதானம் இருப்பதால் முழு ரசிகர்கள் அதுவே ஒரு அலாதியான உணர்வை தருகிறார்கள். அகமதாபாத்தும் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைதானமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நகரமும் தனித்துவமான பாராட்டுகளை வழங்குகிறது, எனவே சேப்பாக்கத்திற்கு பிறகு நான் ஒரே ஒரு மைதானத்தை மட்டும் தேர்வு செய்வது கடினம்.நான் களமிறங்கும்போது, ஸ்கோர்போர்டை கவனிக்கிறேன். அணி என்னைப் பார்த்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்கிறேன். சில பந்துகளே மீதமாக இருந்தால், பெரிய ஷாட்கள் விளையாடுவது மட்டுமே என் குறிக்கோளாக இருக்கும். நான் அடிக்கவேண்டியது “சிக்ஸ்” தான்,’ஓகே, நான் பவுண்டரி அடிக்கிறேன்’ என்று யோசிக்க மாட்டேன். இது பெரிய முக்கியமான போட்டிகளில் மிக முக்கியம், ஒரு பவுண்டரிக்குப் பதிலாக ஒரு சிக்ஸ் அடித்தால் அந்த இரண்டு ரன்கள் கூட பலமான மாற்றத்தை ஏற்படுத்தும்.அதேபோல, பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவது: ‘நீங்கள் 4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6வது பந்து “டாட்” ஆக இருந்தால், அது நமக்கு வெற்றி தரும்.’ அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது, அவர்களால் முடியும் என்று நம்ப வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக, நான் எந்த அணிக்கும் எதிராகவும் சிறப்பாக ஆட விரும்புகிறேன். ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்றால் நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள். எந்த அணிக்கெதிராக ஆடினாலும், குறிக்கோள் வெற்றி பெறுவதுதான். ஆனால், ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் ஒரு ‘டெர்பி’ போல மாறிவிடுகிறது. அவர்கள் இதைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள், புள்ளிவிவரங்களைப் பார்க்க விரும்புகிறார்கள், இது ஐபிஎல் தொடருக்கு நல்லது தான்.பீகாரி (Bhojpuri) மொழி கமெண்டரி குறித்து தோனி பேசிய தோனி, “நான் அதிகமாக பிராந்திய மொழிகளில் கமெண்டரி கேட்கவில்லை, ஏனெனில் மொத்தமாக நேரலைப் பார்த்தால், மிகக் குறைவான ரிப்ளேகளே கிடைக்கும். ஆனால், பிஹாரி (போஜ்புரி) கமெண்டரி பழைய காலத்து வானொலி கமெண்டரியை நினைவுபடுத்துகிறது, அதில் கமெண்டேட்டர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாட்டை விவரிப்பார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக தோன்றுகிறது. எவரும் தங்கள் தாய்மொழியில் விளையாட்டைப் பார்க்க விரும்புவார்கள், அதில் ஒரு தனி உணர்வு இருக்கும்.”ருதுராஜ் கைகவாட் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ஆனதற்கான காரணம் குறித்து பேசிய தோனி, தீவிரமான திட்டமிடலே முக்கியம். பல ஆண்டுகளாக சி.எஸ்.கே அணியில் இருந்திருக்கிறார். அவருடைய மனநிலை அமைதியானது. அதை நாங்கள் கவனித்தோம், மற்றும் அவர் மற்றும் கோச்சிங் ஸ்டாஃப் நல்ல உடன்பாட்டில் இருந்தார்கள். ஐபிஎல் முடிந்தவுடன், ‘90% நீ அடுத்த ஆண்டு கேப்டன்’ என்று கூறிவிட்டேன். பலர் என்னை ‘பின்னணி கேப்டன்’ என்று கூறினார்கள், ஆனால் உண்மையில் 99% முடிவுகளை அவரே எடுத்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன், ஆனால் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளும் அவருடையதுதான். அவர் மிக சிறப்பாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.”தனது கிரிக்கெட் முறையைத் தொடர்ந்து மாற்றிக்கொள்வதற்கான அவசியத்தை பற்றி விவரித்த தோனி, 2008ல் எப்படி டி20 ஆடினோம், 2024ல் எப்படி ஆடுகிறோம். இதில் பெரும் வேறுபாடு உள்ளது. மைதானங்கள் மாறிவிட்டன, பந்தின் தன்மையும் மாறிவிட்டது, தற்போது அதிகம் ரன்கள் வருகிறது. அதேசமயம், பேட்ஸ்மேன்கள் புதிதாக முயற்சிக்கிறார்கள், நவீன ஷாட்களை முயற்சிக்கிறார்கள். எனக்கும் மாறித்தான் ஆட வேண்டும், இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது.”விராட் கோலியுடன் இருக்கும் உறவைப் பற்றி பேசிய தோனி,விராட் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். வெறும் 40-60 ரன்கள் எடுத்தால் திருப்தியடைய மாட்டார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் ஒரு இளம் வீரராக இருந்தபோதும், எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடந்தன. தற்போது இருவரும் கேப்டன் இல்லை, எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது. ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் உள்ளது என்று தோனி கூறியுள்ளார்.