பொழுதுபோக்கு
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழுவினர் அறிவிப்பு!

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ எப்போது ரிலீஸ் தெரியுமா? படக்குழுவினர் அறிவிப்பு!
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, தான் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன் காரணமாக, சினிமாவில் இருந்து முற்றிலும் தான் விலகுவதாக அவர் கூறினார். எனினும், முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.இதன் பேரில், கடந்த ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ என்ற திரைப்படத்தில் விஜய் நடித்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அந்த வகையில் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசி திரைப்படத்தை நடிப்பதாகவும், இப்படத்தை கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.பூஜா ஹெக்டே, மமிதா, பாபி தியோல் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Adiyum othaiyum kalanthu vechu vidiya vidiya virundhu vecha.. #JanaNayaganPongal 🔥09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss… pic.twitter.com/hIhBlFWVzg அதன்படி, அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரது கடைசி திரைப்படம் என்ற வகையில் சிலர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.