விளையாட்டு
DC vs LSG Live Score: வெற்றியுடன் தொடங்கப் போவது யார்? டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

DC vs LSG Live Score: வெற்றியுடன் தொடங்கப் போவது யார்? டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலபரிட்சை நடத்துகிறது. சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாத ஐ.பி.எல். தொடரில், தனது பழைய அணிக்கு எதிராக மோத களமாடுகிறார் ரிஷப் பண்ட். லக்னோ அணியை வழிநடத்தும் அவர் டெல்லிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்க நினைப்பார். அதனை முறியடிக்க முன்னாள் லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் நினைப்பார். அவர் தற்போது டெல்லி அணிக்காக வெறும் பேட்டராக களமிறங்குகிறார். கேப்டன் பொறுப்பை அக்சர் கையாள்வதால், ராகுல் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இதற்கிடையில், காயம் காரணமாக லக்னோ அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் அவதியுற்று வருகிறார்கள். ஆவேஷ் கான், மயங்க் யாதவ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் காயத்தால் தவிக்கிறார்கள். மேலும் மொஹ்சின் கான் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது ஷர்துல் தாக்கூருக்கு ஆடும் லெவனில் இடம் பெறும் வாய்ப்பை வழங்கியுள்ளது. நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் 5 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் டெல்லி 2 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் லக்னோ 3 முறை வெற்றி பெற்றுள்ளது.இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்: டெல்லி: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கே.எல். ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் ஷர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், டி நடராஜன், (இம்பேக்ட் பிளேயர்: கருண் நாயர்/மோஹித் ஷர்மா). லக்னோ: அர்ஷின் குல்கர்னி, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப் (இம்பேக்ட் பிளேயர்: ஆகாஷ் சிங்/ஷாபாஸ் அகமது/மணிமாறன்).