விளையாட்டு
IPL 2024 GT vs CSK Highlights : பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை அணிக்கு 6-வது தோல்வி : ப்ளேஅப் வாய்ப்பு கிடைக்குமா?

IPL 2024 GT vs CSK Highlights : பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை அணிக்கு 6-வது தோல்வி : ப்ளேஅப் வாய்ப்பு கிடைக்குமா?
IPL 2024 | CSK vs GT: இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும், 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதனால் இன்றைய போட்டி முக்கியத்துவமாக அமைந்தது.இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல்ல களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மான் கில் – சாய் சுதர்சன் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.இந்த ஜோடியை பிரிக்க சென்னை அணி மேற்கொண்ட முயற்சிக்கு அவ்வளவு எளிதில் பலன் கிடைக்கவில்லை. சாய் சுதர்சன் சுப்மான் கில் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், சுப்மான் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சென்னை அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசன்கள் சேர்த்து அசத்தினார்.16-வது ஒவரில் இருவரும் அடுத்ததடுத்து சதம் கடந்து அசத்தினர். இதன் மூலம் ஒரு இன்னிங்சில் இரு வீரர்கள் சதம் கடப்பது ஐ.பி.எல் தொடரில் 3-வது நிகழ்வாக அமைந்தது, அதேபோல் சுப்மான் கில் சதம் கடந்தபோது ஐபிஎல் தொடரில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 100-வது சதமாக அமைந்தது. சுதர்சன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்த நிலையில், துஷார்தேஷ் பாண்டே வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.51 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி 7 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். அதே ஓவரில் கடைசி பந்தில் சுப்மான் கில் ஆட்டமிழந்தார். 55 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி 6 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிக்கட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள குஜராத் அணி சற்று சிரமத்தை எதிர்கொண்டது. கடைசி 3 ஓவர்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்படடது.நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து குஜராத் அணியை கட்டுப்படுத்த உதவினார்.தொடர்ந்து 232 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆன நிலையில், ரஹானே ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார். இதனால் சென்னை அணி 10 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.இதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேரில் மீச்செல் – மொயின் அலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த ஜோடி நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடியதால் சென்னை அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. இருவரும் அடுத்துடுத்து அரைசைதம் கடந்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்தனர்.அரைசதம் கடந்த மீச்செல் 34 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 63 ரன்களும், மோயின் அலி 36 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் சென்னை அணியின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்த டூபே, 21, ஜடேஜா, 18, சாண்ட்னர் 0 என அடுத்தடுத்து வீழந்தனர். இதனால் சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.கடைசி கட்டத்தில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் தோனி, 3 சிக்சர் விளாசி தனது ரசிகர்களை குஷிப்படுத்தினார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.இதன்மூலம் 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள சென்னை அணி 4-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனாலும் ப்ளே அப் வாய்ப்பில் நீடிக்க அடுத்து வரும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றியை பெற வேண்டும். அதேபோல் 12 போட்டிகளில் 5 வெற்றியுடன் 10 புள்ளிக்ள பெற்றுள்ள குஜராத் அணி, 8-வது இடத்தில் உள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசி அசத்திய மொயின் அலி, அரைசதம் கடந்த நிலையில், 36 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.34 பந்துகளை சந்தித்த டெரில் மிச்செல் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் அடித்துள்ளார்.10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த சென்னை அணிக்கு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த மொயின் அலி – மீச்செல் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் மீச்செல் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.3 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. கடைசி விக்கெட்டாக கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 3 பந்தகளை சந்தித்த ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார்.232 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக முதல் ஓவரின் கடைசி பந்தில் ரச்சின் ரவீந்திரா ரன்அவுட் ஆன நிலையில், 2-வது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்தாா. இதனால் சென்னை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.50 பந்துகளில் 103 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் துஷார் தேஷ்பாண்டே வீசிய 18-வது ஓவரிலன் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அதே ஓவரின் கடைசி பந்தில் சுப்மான் கில் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த சாய் சுதர்சன் 103 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதில் 5 சிக்சர் 7 பவுண்டரி அடங்கும். குஜராத் அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 209 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 9 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் விளாசியுள்ளார்.14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 179 ரன்கள் எடுத்துள்ளது. கில் 86 ரன்களுடனும், சாய் சுதர்சன் 92 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.9 ஓவர்களில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் கடந்த சாய் சுதர்சன் 52 ரன்களுடனும், கில் 40 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ள குஜராத் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது. கில் – சுதர்சன் இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.சென்னை அணியில் ரஹானே நீக்கப்பட்டு மீண்டும் ரச்சின் ரவீந்திரா அணிக்கு திரும்பியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மான் கில்(கே), சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட்(வி), ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகிசென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (கே), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (வி), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சஹார், பதிரானா இருவரும் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில், முஸ்தாபிசூர் ரஹ்மான் சொந்த நாடு திருப்பியுள்ளார். இதனால் சென்னை அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை குஜராத் அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றியை பெற்றுள்ள நிலையில், சென்னை அதிகபட்சமாக 206 ரன்களும், குஜராத் அதிகபட்சமாக 214 ரன்களும் குவித்துள்ளது.